இந்திரன்ஸ் – மதுபாலா நடிப்பில் உருவாகியுள்ள ‘சின்ன சின்ன ஆசை’ !

90-களின் தொடக்க காலத்தில் நடிகையாக அறிமுகமாகி, இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை மதுபாலா. அந்த திரைப்படத்தில் அவர் இடம்பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடல், அவரை பட்டித்தொட்டி எங்கும் அறிமுகப்படுத்தி மிகப்பெரிய புகழைப் பெற்றுத் தந்தது.

தற்போது அந்தப் பாடலின் வரிகளை தலைப்பாகக் கொண்டு, மலையாளத்தில் ‘சின்ன சின்ன ஆசை’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக மதுபாலாவே நடித்துள்ளார். கதையின் நாயகனாக சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் இந்திரன்ஸ் நடித்துள்ளார்.

வருகிற ஜூன் 19-ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. நடிகர் துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுகிறது. முழுக்க முழுக்க வாரணாசியை மையமாகக் கொண்டு கதையும் கதைக்களமும் அமைந்த வகையில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘96’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading