ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன்?

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சிவராஜ் குமார், மோகன்லால், எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்கரவர்த்தி மற்றும் சந்தானம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ஜெயிலர் 2 திரைப்படத்தில் இன்னும் ஒரு முக்கியமான கேமியோ கதாபாத்திரத்திற்கான காட்சிகளை மட்டும் படமாக்க வேண்டியுள்ளது. அந்த சிறப்பு தோற்றத்தில் ஷாருக்கான், பாலகிருஷ்ணா, பவன் கல்யாண் அல்லது ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோரில் ஒருவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கடந்த சில வாரங்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.

இதற்கிடையில் சமீபத்தில் எந்த பாலிவுட் நடிகரும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியானது. ஆனால் தற்போது அந்த தகவலுக்கு மாறாக புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன், ஜெயிலர் 2 திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவரைச் சார்ந்த காட்சிகளின் படப்பிடிப்பை வரும் ஜூன் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சென்னை நகரில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading