மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகை சுவாசிகா, தமிழில் கோரிப்பாளையம், அப்புச்சி கிராமம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தையும் ரசிகர்கள் மத்தியில் தனித்துவமான கவனத்தையும் பெற்றுத் தந்த படம் லப்பர் பந்து தான்.
இந்த திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சுவாசிகாவுக்கு தமிழில் மீண்டும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் மூலம் அவர் தொடர்ந்து பல புதிய பட வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். மாமன், ரெட்ரோ, கருப்பு ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நூறு சாமி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
அண்மையில் அவர் அளித்த ஒரு பேட்டியில் பகிர்ந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் பேசிய அவர், “சமீபத்தில் தமிழில் வெளியாகி வெற்றிப்படமாக அமைந்த பிளாஸ்ட் திரைப்படத்தில் நடிகை அபிராமி நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிப்பதற்கான வாய்ப்பு எனக்குத்தான் வந்தது. ஆனால் அந்த சமயத்தில் கருப்பு மற்றும் நூறு சாமி திரைப்படங்களின் படப்பிடிப்புகளில் தொடர்ந்து பங்கேற்று வந்ததால், பிளாஸ்ட் படத்திற்கு தேவையான கால்ஷீட்டை என்னால் வழங்க முடியவில்லை. அதனால் அந்த வாய்ப்பு தவறிவிட்டது. பிளாஸ்ட் திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது எனக்கு சற்று வருத்தமாகவே உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
—
