‘லைட் வெயிட் பே’ படப்பிடிப்பு நிறைவு… விக்கல்ஸ் விக்ரம் ஹீரோவாக அறிமுகம்!

ஸ்டாண்ட்-அப் காமெடியனாக அறியப்படும் “விக்கல்ஸ்” விக்ரம் மற்றும் பிட்னஸ் நிபுணர் ஆரத்தி கிருஷ்ணா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள தமிழ் ரொமான்டிக் படம் ‘லைட் வெயிட் பே’. சென்னை, பெங்களூரு, மைசூரு ஆகிய நகரங்களில் நான்கு கட்டங்களாக நடைபெற்ற 45 நாள் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

கதை மற்றும் இயக்கத்தை கே.சி. குரு மேற்கொண்டுள்ள நிலையில், படத்தை ஹிதா ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. “மாறுபட்ட வாழ்க்கை நோக்கங்கள் கொண்ட இருவரின் உறவை மையமாகக் கொண்ட இந்தக் கதை, படப்பிடிப்பு பயணத்தின் மூலம் நாங்கள் பெருமைப்படும் ஒரு படைப்பாக வளர்ந்துள்ளது” என்று இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக கதாநாயகனாக நடித்துள்ள விக்ரம், “நடிப்பதோடு வசனங்களையும் எழுதும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவம். பார்வையாளர்களுக்கு மனதிற்கு நெருக்கமான பொழுதுபோக்கு படமாக இது அமையும்” என்றார்.ஆரத்தி கிருஷ்ணா, “பிட்னஸ் உடலை சவாலுக்கு உட்படுத்தும்; ஆனால் நடிப்பு என்னை உணர்ச்சி ரீதியாக புதிய அனுபவங்களுக்கு அழைத்துச் சென்றது” என்று கூறினார்.தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும், இந்தாண்டு இறுதியில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading