மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மம்மூட்டி, இயக்குநர் நிதிஷ் சகதேவ் இயக்கும் புதிய திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கியுள்ளது.
முதல் நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட முக்கிய காட்சிகளின் பின்னணிக் காட்சிகள் (BTS) அடங்கிய வீடியோவை படக்குழு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகா பரவி வருகிறது.
இந்தப் புதிய அப்டேட் காரணமாக, படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.ஜீவா நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் நிதிஷ் சகதேவ் தற்போது மம்மூட்டியுடன் இணைந்திருப்பது இந்தப் படத்திற்கு கூடுதல் கவனத்தை பெற்றுத்தந்துள்ளது.
