நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் ராம்குமாரின் மகனுமான தர்ஷன் கணேசன், ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த படம், சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது செப்டம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் டி.டி. பாலசந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கங்கை அமரன், ரோஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கும் இந்தப் படம், தர்ஷன் கணேசனை தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறது. சிவாஜி கணேசனின் குடும்பத்திலிருந்து புதிய தலைமுறை நடிகர் அறிமுகமாக இருப்பதால், ‘லெனின் பாண்டியன்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
