திருமணம் குறித்து தற்போதைக்கு ஐடியா இல்லை – நிகிலா விமல் OPEN TALK!

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக தனது கலைப்பயணத்தை தொடங்கிய நடிகை நிகிலா விமல், பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டாரத்தை உருவாக்கியுள்ளார். தமிழில் ‘வெற்றிவேல்’, ‘கிடாரி’, ‘பஞ்சுமிட்டாய்’, ‘தம்பி’, ‘போர் தொழில்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள அவர், ஒவ்வொரு படத்திலும் தனது இயல்பான மற்றும் யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். குறிப்பாக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘வாழை’ திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது.

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில் கலந்து கொண்ட நடிகை நிகிலா விமலிடம், “உங்கள் மனதில் தற்போது யாராவது இருக்கிறார்களா? நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் சிரித்தபடியே பதிலளிக்கையில், “என் மனதில் இருப்பவர்கள் ரசிகர்கள் மட்டும்தான். அவர்கள் தான் என் மனதில் நிறைந்து இருக்கிறார்கள். தற்போது காதல் குறித்து நான் எந்த விதத்திலும் சிந்திக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் திருமணம் குறித்து பேசுகையில், “திருமணம் பற்றியும் இப்போது எந்தத் திட்டமும் இல்லை. அந்த எண்ணம் எப்போது தோன்றுகிறதோ அப்போது அதைப் பற்றி யோசிக்கலாம். காதலும் திருமணமும் வாழ்க்கையில் முக்கியமான விஷயங்கள்தான். ஆனால் தற்போது என்னுடைய முழு கவனமும், சிந்தனையும், செயல்பாடுகளும் சினிமாவைச் சுற்றியே இருக்கின்றன. எனது திரைப்படப் பயணத்தில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறேன்” என்று கூறியுள்ளார். நிகிலா விமலின் இந்த வெளிப்படையான மற்றும் நேர்மையான பதில் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading