இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் பூஜா ஹெக்டே, தமிழில் ‘முகமூடி’, ‘பீஸ்ட்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பகிர்ந்த கருத்துகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
அப்போது பேசிய பூஜா ஹெக்டே, “என்னைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எண்ணங்கள் இருக்கும். சிலருக்கு என்னுடைய நடிப்பு பிடிக்கும், சிலருக்கு என்னுடைய நடனம் பிடிக்கும். ஆனால் என்னைப் பற்றி எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என் சிரிப்புதான். எந்த சூழ்நிலையிலும் சோகம், வலி அல்லது வேதனையை வெளிப்படுத்தாமல் என்னை முன்னேற்றிச் செல்லும் சக்தியாக அந்த சிரிப்பு இருக்கிறது. அதுவே என்னுடைய பலமும், அடையாளமும் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.
