மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள தொடர்களில் ஒன்றாக இருக்கிறது ஹார்ட் பீட் சீரிஸ். அதன் ரசிகர்களுக்கு தற்போது ஷாக் கொடுத்து இருக்கிறார் நடிகை யோகலட்சுமி. அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இதை ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கலாம். என்னை மன்னித்துவிடுங்கள். நான் ஹார்ட் பீட் சீரிஸில் இருந்து விலகுகிறேன் என்பதை கனத்த இதயத்துடன் உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். தேஜு கதாப்பாத்திரம் பல பெண்களுக்கு ஊக்கமளித்து இருக்கிறது. நான் தேஜுவை மிஸ் செய்வேன். பலரும் ஏமாற்றம் அடைந்து இருக்கலாம். இது Goodbye அல்ல. என் இறுதி மூச்சு இருக்கும் வரை உங்களை என்டர்டெயின் செய்துகொண்டே இருப்பேன்” என்று எமோஷ்னலாக பதிவிட்டுள்ளார்.
Add a Comment
