‘ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் புதிய திரைப்படம் ஓம். வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆடேக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படம், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
பிரம்மாண்ட நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகும் இந்த ஆக்ஷன் திரைப்படத்தில், ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி கதாநாயகிகளாக நடிக்கினனர. முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்முட்டி இணைந்துள்ளதுடன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷாவும் தமிழில் நடித்துள்ளார். இந்தக் கூட்டணியே ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அண்மையில் வெளியான டைட்டில் போஸ்டரும் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், வரும் அக்டோபர் 16-ஆம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
தற்போது ‘ஓம்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தனுஷ் மற்றும் மம்முட்டி இணைந்து இடம்பெறும் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அட்டவணை நிறைவடைந்தவுடன் பின்னணிப் பணிகள் முழு வீச்சில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் வெளியிட்டுள்ள படத்தின் தீம் மியூசிக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.மேலும், தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 28-ஆம் தேதி ‘ஓம்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் இசை மற்றும் புரமோஷன் பணிகள் விரைவில் அடுத்த கட்டத்தை எட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
—
