இசையுலகை ஆட்டிப்படைக்கும் அனிருத்தின் ‘Raga of Revenge’ டிராக்!

வணிகத் திரைப்படங்களுக்கான பின்னணி இசையை உருவாக்குவதில் இசையமைப்பாளர் அனிருத் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார். குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக அவர் வழங்கி வரும் பின்னணி இசைகள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றன. நடிகர் ரஜினிகாந்தின் 173-வது திரைப்பட அறிவிப்பு காணொளிக்காக அவர் அமைத்த பின்னணி இசை, அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் அறிவிப்பு இசை, மேலும் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணையும் திரைப்படத்தின் அறிவிப்பு இசை ஆகியவை சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று, இலட்சக்கணக்கான குறும்படக் காணொளிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்து வரும் ‘டிசி’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியில், “Raga of Revenge” என்ற கருத்தை மையமாகக் கொண்ட பின்னணி இசையை அனிருத் பயன்படுத்தியுள்ளார். திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியான தருணத்திலிருந்தே இந்த இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், சமூக வலைதளங்களில் பலரும் அதனைப் பயன்படுத்தி காணொளிகளை உருவாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், அந்த பின்னணி இசை உலகப் புகழ்பெற்ற இசைத் தளமான ஸ்பாட்டிஃபையில் ஒரு கோடிக்கும் அதிகமான முறை கேட்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதேபோன்று யூடியூப்பிலும் இரண்டு கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த இசை, மற்ற தளங்களிலும் இலட்சக்கணக்கான முறை கேட்கப்பட்டு புதிய சாதனையை படைத்து வருகிறது. இதனால் ‘Raga of Revenge’ ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading