‘கட்டா குஸ்தி 2’ டப்பிங் பணிகளை நிறைவு செய்த விஷ்ணு விஷால்!

கடந்த 2022-ஆம் ஆண்டு இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இணைந்து நடித்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதே கூட்டணி மீண்டும் இணைந்து ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளது.

முதல் பாகத்தில் நடித்திருந்த விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கருணாஸ் மற்றும் முனிஸ்காந்த் ஆகியோர் இந்த இரண்டாம் பாகத்திலும் தங்களது கதாபாத்திரங்களை தொடர்ந்துள்ளனர். வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும், விஷ்ணு விஷாலும் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

வரும் ஜூலை 3-ஆம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதை முன்னிட்டு, தற்போது படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தில் தன்னுடைய அனைத்து காட்சிகளுக்குமான டப்பிங் பணிகளையும் நடிகர் விஷ்ணு விஷால் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் படத்தின் வெளியீட்டு பணிகள் மேலும் வேகமடைந்துள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading