மீண்டும் இணைகிறதா ’24’ பட கூட்டணி?

கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனம் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரித்து வருகிறது. தமிழ் திரையுலகிலும் நடிகர் விஜய் நடித்துவரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் மூலம் அந்த நிறுவனம் அறிமுகமாக உள்ளது.

‘ஜனநாயகன்’ திரைப்படத்தைத் தொடர்ந்து சுமார் நான்கு தமிழ் திரைப்படங்களை தயாரிக்க கே.வி.என் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒரு திரைப்படத்தை நடிகர் சூர்யாவை வைத்து தயாரிக்க உள்ளதாகவும், அந்த திரைப்படம் சூர்யாவின் 50-வது திரைப்படமாக அமைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சூர்யா நடிக்கும் இந்த புதிய திரைப்படத்தை இயக்குநர் விக்ரம் குமார் இயக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே சூர்யா மற்றும் விக்ரம் குமார் கூட்டணியில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘24’ திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading