‘பரிமளா & கோ’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

‘பசங்க’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாண்டிராஜ், அதன் பின்னர் ‘வம்சம்’, ‘மெரினா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘தலைவன் தலைவி’ திரைப்படமும் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த நிலையில், தற்போது அவர் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘பரிமளா & கோ’. இந்த திரைப்படத்தில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு, சந்தோஷ் சோபன் மற்றும் அனந்திகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஜியார்ஜி சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். முழுக்க முழுக்க நகைச்சுவை பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த திரைப்படத்திற்கான பின்னணி குரல் பதிவு பணிகளை நடிகர் ஜெயராம், மிஷ்கின், சாண்டி மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நிறைவு செய்துள்ளனர். அதுதொடர்பான காணொளியையும் படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், இந்த திரைப்படத்தின் ‘வாச்சா உடாத’ என்ற காணொளி பாடலும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக விஜய் சேதுபதி, விமல், சீமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில், தற்போது ‘பரிமளா & கோ’ திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், இந்த திரைப்படம் வருகிற ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading