கவனத்தை ஈர்க்கும் ‘கான்சிட்டி’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல்!

நடிகர் அர்ஜுன் தாஸ், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கான்சிட்டி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அன்னா பென், வடிவுக்கரசி மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இந்த திரைப்படத்தின் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. நகரத்தில் வாழும் ஒரு நடுத்தர குடும்பத்தின் உணர்வுகளையும் வாழ்க்கை சூழல்களையும் மையமாகக் கொண்ட கதைக்களத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளதாகவும், அனைத்து தரப்பு மக்களையும் இந்த திரைப்படம் கவரும் என்றும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

சமீபத்தில் ‘கான்சிட்டி’ திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்தது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். மேலும், இந்த திரைப்படத்தின் ஒலிப்பதிவு உரிமையை டி சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதேபோல், இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு ‘கான்சிட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தள காணொளியையும் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது ‘கான்சிட்டி’ திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ‘பிராடுபயலே’ பாடல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் வருகிற ஜூன் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading