‘தனிமையில் வாழ்வதில் வருத்தமில்லை’… மனம் திறந்த நடிகை அனுமோல்!

மலையாள நடிகையான அனுமோள், தமிழில் கண்ணுக்குள்ளே, சூரன், திலகர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ‘அயலி’ வெப் தொடரின் மூலம் ரசிகர்களிடம் தனி கவனத்தை பெற்ற அவர், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

சமீபத்திய நேர்காணலில், காதல் உறவில் இருக்க முயற்சி செய்ததாகவும், ஆனால் அது நீண்ட நாள் நீடிக்கவில்லை என்றும் அனுமோள் தெரிவித்தார். அதற்காக யாரையும் குறை கூற விரும்பவில்லை என்றும், சில உறவுகள் இயல்பாக முடிவுக்கு வருவது வாழ்க்கையின் ஒரு பகுதி என்றும் அவர் கூறினார்.

மேலும், ஒரு பெண்ணின் வாழ்க்கை முழுமையடைய திருமணம் மட்டுமே வழி என்ற எண்ணத்தை தாம் ஏற்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். தற்போது தனியாக வாழ்ந்தாலும் முழு சுதந்திரத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பதாகவும், தனது விருப்பப்படி வாழ்க்கையை முன்னெடுத்து வருவதில் திருப்தி இருப்பதாகவும் அனுமோள் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading