ஜெயிலர் 2 திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன்?

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த திரைப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்கரவர்த்தி மற்றும் சந்தானம் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் இன்னும் ஒரு சிறப்பு தோற்றக் கதாபாத்திரத்திற்கான காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது. ஆரம்பத்தில் அந்த கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவர் இந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகின. அதன் பின்னர் பாலகிருஷ்ணா மற்றும் பவன் கல்யாண் உள்ளிட்ட நடிகர்களுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அந்த சிறப்பு தோற்றக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்களிடையே இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading