தமிழில் ‘சர்தார் 2’, ‘மார்ஷல்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நடிகர் கார்த்தி, அடுத்ததாக தெலுங்கு இயக்குநர் கல்யான் சங்கருடன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். ‘மேட்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற கல்யான் சங்கர் இயக்கும் இந்த படம், கார்த்தியின் 30வது திரைப்படமாக உருவாகிறது.
இந்த திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஐதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த திரைப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த புதிய படம் குறித்து ரசிகர்களிடையே தற்போது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
