‘பரிமளா & கோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘பசங்க’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாண்டிராஜ், அதன் பின்னர் ‘வம்சம்’, ‘மெரினா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அவரின் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘தலைவன் தலைவி’ திரைப்படமும் ரூ.100 கோடி வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த நிலையில், இயக்குநர் பாண்டிராஜ் தற்போது ‘பரிமளா & கோ’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு, சந்தோஷ் சோபன் மற்றும் அனந்திகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜியார்ஜி சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படம் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும், இந்த படத்தின் டப்பிங் பணிகளை நடிகர்கள் ஜெயராம், மிஷ்கின், சாண்டி மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் தற்போது நிறைவு செய்துள்ளனர். அதற்கான வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு இப்படத்தின் ‘வாச்சா உடாத’ வீடியோ பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் விமல் மற்றும் இயக்குநர் சீமான் உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிலையில், ‘பரிமளா & கோ’ திரைப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading