இளைஞர்களுக்கு ‘பெத்தி’ திரைப்படம் ஒரு புதிய நம்பிக்கையை அளிக்கும் – நடிகர் ரவி கிஷன்!

தெலுங்கு சினிமாவில் ராம்சரண் மற்றும் ஜான்வி கபூர் இணைந்து நடித்துள்ள ‘பெத்தி’ திரைப்படம் வரும் ஜூன் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

மேலும், இந்த திரைப்படத்தில் சிவராஜ்குமார், பொம்மன் இரானி மற்றும் போஜ்புரி நடிகர் ரவி கிஷன் உள்ளிட்ட பல மொழிகளைச் சேர்ந்த பிரபல நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் போபாலில் நடைபெற்றது.

அப்போது பேசிய நடிகர் ரவி கிஷன், “வாழ்க்கையில் நம்பிக்கையை இழந்து சோர்ந்து போயிருக்கும் இளைஞர்களுக்கு ‘பெத்தி’ திரைப்படம் ஒரு புதிய நம்பிக்கையை அளிக்கும். இதை இந்தியாவின் நம்பிக்கை, இளைஞர்களின் நம்பிக்கை என்றும் சொல்லலாம். இந்த படத்தில் ராம்சரண் வெளிப்படுத்தியுள்ள நடிப்புக்கு தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகள் கிடைக்கும் என்பதை இப்போதே என்னால் உணர முடிகிறது” என்று பாராட்டியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading