நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை… ஆனால் எல்லை உண்டு – நடிகை பாயல் ராஜ்புத் OPEN TALK!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் பாயல் ராஜ்புத், தமிழில் ‘லெஜண்ட்’ சரவணனுடன் இணைந்து ‘லீடர்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பாயல் ராஜ்புத், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார். அவரை இன்ஸ்டாகிராமில் 40 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகைகளின் கவர்ச்சி குறித்து சமீபத்தில் அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அது முகம் சுளிக்க வைக்கும் விதமாக இருக்கக்கூடாது. சினிமாவில் அழுகை, ஆக்ஷன் போன்றவை எப்படி ஒரு பகுதியாக இருக்கிறதோ, அதுபோல கவர்ச்சியும் நடிப்பின் ஒரு அங்கமே. அதற்காக உடனடியாக விமர்சிப்பது சரியல்ல. சினிமா என்பது மக்களை மகிழ்விக்கும் பொழுதுபோக்கு துறை. ரசிகர்களை கவர்வதும் மகிழ்விப்பதும் முக்கியம். எல்லை மீறாமல் இருக்கும் எந்த விஷயமும் தவறல்ல, அது சரியானதே” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading