அம்மா ஆறு மாதம் பேசவே இல்லை… சினிமாவுக்காக வீட்டிலேயே போராடினேன் – பாக்யஸ்ரீ போர்ஸ்

துல்கர் சல்மான் நடித்த ‘காந்தா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், பின்னர் அகில் நடித்த ‘லெனின்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்தப் படம் வெற்றி பெற்ற பிறகு, அவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் ‘சேயோன்’ படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் பேசிய அவர், சினிமாவுக்கு வந்த ஆரம்ப கால அனுபவங்களை பகிர்ந்தார். “நான் நடிகையாக வேண்டும் என்று நினைத்தபோது, வீட்டில் யாருக்கும் அது பிடிக்கவில்லை. அம்மாவும் எதிர்த்தார், அப்பாவும் ஆதரவு தரவில்லை. என் சகோதரியும் அதற்கு சம்மதிக்கவில்லை,” என்று கூறினார்.

அதன்பிறகு நடந்த சம்பவம் குறித்து அவர் கூறியது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. “ஒரு கட்டத்தில் என் அம்மா என் வாட்ஸ் அப் எண்ணையே பிளாக் செய்து, ஆறு மாதம் என்னுடன் பேசாமல் இருந்தார். அது கோபத்தால் இல்லை; சினிமா உலகம் குறித்து அவருக்கு இருந்த பயம் தான் காரணம்,” என்றார்.இருப்பினும், தன்னுடைய கனவை விட்டுவிடாமல் தொடர்ந்து முயன்றதாகவும், “ஒருநாள் என் பெற்றோர்கள் என்னைப் பார்த்து பெருமைப்பட வேண்டும் என்பதற்காகத்தான் நான் போராடினேன்,” என்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading