என் மனதில் இருந்து மறையாத அந்த சம்பவம்… மனம் திறந்த நடிகை பூஜிதா பொன்னாடா!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து வரும் பூஜிதா பொன்னாடா, தமிழில் ‘செவன்’, ‘ஜாலியோ ஜிம்கானா’, ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’, ‘படையாண்டா மாவீரா’, ‘யோகிடா’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவத்தை குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் உருக்கமாக பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “நான் 11ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, என்னுடன் படித்த ஒரு பையன் என் செல்போன் எண்ணை கண்டுபிடித்து எனக்கு போன் செய்து பேசினார். அந்த விஷயத்தை நான் நேர்மையாக என் அப்பாவிடம் கூறினேன்.

ஆனால் அவர் மிகவும் கோபமடைந்து, நான் பயன்படுத்தி வந்த செல்போனை தூக்கி எறிந்து உடைத்துவிட்டார். நான் என்ன தவறு செய்தேன் என்பதே எனக்கு அப்போது புரியவில்லை. உண்மையை சொன்னதே தவறா என்று நினைத்து மிகவும் வேதனைப்பட்டேன். அந்த சம்பவம் இன்னும் என் மனதில் இருந்து மறையவில்லை. அதை மறக்க வேண்டும் என்று நான் பலமுறை முயற்சி செய்திருக்கிறேன்” என்று மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading