பிடிக்காதவர்களை வெறுப்பதற்கோ, ட்ரோல் செய்வதற்கோ நேரத்தை வீணாக்காதீர்கள் – அல்லு அர்ஜுன்!

பான் இந்தியா நடிகரான அல்லு அர்ஜுன் சமீபத்தில் நடைபெற்ற, AAFA Annual Summit 2026 நிகழ்வில் ரசிகர்களைச் சந்தித்து உரையாற்றிய Icon Star அல்லு அர்ஜுன், நேர்மறையான எண்ணங்களுடன் வாழ்க்கையில் முன்னேறுமாறு அறிவுரை வழங்கினார்.

அவர் பேசுகையில், “பிடிக்காதவர்களை வெறுப்பதற்கோ, ட்ரோல் செய்வதற்கோ உங்கள் நேரத்தில் 1% கூட வீணாக்காதீர்கள். உங்கள் இலக்கில் மட்டும் கவனம் செலுத்துங்கள். என் மீதும் என் கலை மீதும் நீங்கள் காட்டி வரும் அன்பிற்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்” என்று உணர்வுபூர்வமாக தெரிவித்தார்.

அவரது இந்த உரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், அன்பு, நன்றியுணர்வு மற்றும் நேர்மறை சிந்தனையை வலியுறுத்தும் செய்தியாக அமைந்தது. இந்நிலையில், அல்லு அர்ஜுன் தற்போது இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ‘AA22xA6’ படத்தில் நடித்து வருகிறார். அதிக பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் இந்திய அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் அவரது உரையும், புதிய பட அப்டேட்டுகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading