ஹிப் ஹாப் ஆதியின் மீசையமுறுக்கு- 2 படத்தின் ‘கோயிந்தம்மா’ பாடல் வெளியாகி வைரல்!

தனியிசை உலகில் ராப் பாடகராக அறிமுகமான ஹிப் ஹாப் ஆதி, தற்போது தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவரின் பாடல்களுக்கு இளைஞர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ‘தனி ஒருவன்’, ‘ஆம்பள’, ‘அரண்மனை’ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், ‘மீசையமுறுக்கு’, ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’, ‘சிவகுமாரின் சபதம்’, ‘அன்பறிவு’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

ஹிப் ஹாப் ஆதி இயக்கி, இசையமைத்து, கதாநாயகனாக நடித்த ‘மீசையமுறுக்கு’ திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகமாக ‘மீசையமுறுக்கு 2’ திரைப்படம் அவ்னி மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகை கேத்திகா ஷர்மா கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், யூடியூபர் ஹர்ஷத் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்ற ‘ஆரா 10/10’ மற்றும் ‘பப்பாளி பழமே’ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்த நிலையில், ‘மீசையமுறுக்கு 2’ திரைப்படத்தில் இடம்பெறும் ‘கோயிந்தம்மா’ என்ற புதிய பாடல் இன்று மாலை வெளியாகியுள்ளது. இந்த பாடலை கௌஷிக் கிரிஷ், கானா வினோத், கானா உலகம் தரணி மற்றும் கானா சுதாகர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading