இயக்குனர் மாரி செல்வராஜ் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம்?

இயக்குநர் மாரி செல்வராஜ், தமிழ் திரையுலகில் மிகக் குறுகிய காலத்திலேயே சமூக கருத்துக்கள் மற்றும் யதார்த்தமான கதைக்களங்களின் மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன் காளமாடன்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி, தமிழ் சினிமாவில் வலுவான இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த நிலையில், இயக்குநராக வெற்றிகரமாக பயணித்து வரும் மாரி செல்வராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளராக அவர் உருவாக்கும் முதல் திரைப்படத்தை, அவரது உதவி இயக்குநரான அரவிந்த் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் அமீர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், நடிகை ஸ்வஸ்திகா முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த திரைப்படத்திற்கான பூஜை விழா சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இதனுடன், படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களின் சில பகுதிகளை இயக்குநர் மாரி செல்வராஜே எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த புதிய திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading