கவனத்தை ஈர்க்கும் ‘என்ன விலை’ படத்தின் டிரெய்லர்!

சஜீவ் பழூர் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘என்ன Html’. கலமாயா சினிவெர்ஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நிமிஷா சஜயன், கருணாஸ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன்ராம், லொள்ளு சபா சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணா, தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு, சமூக மற்றும் அரசியல் பின்னணியையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘என்ன விலை’ திரைப்படம் திரில்லர் களத்தில் பயணிக்கிறது. கலாமயா பிலிம்ஸ் சார்பில் கிதேஷ் வி தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம், சென்னை, பாண்டிச்சேரி, கொச்சி உள்ளிட்ட 56 இடங்களில் மூன்று கட்டங்களாக நடைபெற்றுள்ளது. படத்தின் முதல் பாடலான ‘கடலாடும் சீமையிலே’ ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமாரின் அதிகாரப்பூர்வ இசைத் தளத்தில் வெளியான இந்த பாடலை அந்தோணி தாசன் பாடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ‘என்ன விலை’ படத்தின் ஆடியோ உரிமையை ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தற்போது படத்தின் கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் வகையில் டிரெய்லரும் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம் வரும் செப்டம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading