காமெடி நடிகராக ரசிகர்களிடம் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள யோகி பாபு, அவ்வப்போது கதாநாயகனாகவும் பல்வேறு படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் ‘மண்டேலா’, ‘தர்மபிரபு’, ‘கூர்கா’, ‘பொம்மை நாயகி’, ‘தூக்குதுரை’, ‘லக்கிமேன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
சமீபத்தில் கூட ‘கெணத்த காணோம்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்த யோகி பாபு, தற்போது ரவிமோகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன் ஆர்டினரி மேன்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து, இயக்குநர் பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் ‘யோகிபாபும் 100 குரங்குகளும்’ என்ற புதிய படத்திலும் அவர் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுமட்டுமின்றி, யோகி பாபுவே ஒரு புதிய படத்திற்கான கதையை எழுதி, அதில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் இந்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர்களாக வலம் வரும் சந்தானம், சூரி, சதீஷ் போன்ற நடிகர்களின் பாணியில் முழுநேர கதாநாயகனாக யோகி பாபு இனி செயல்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் யோகி பாபுவை கதாநாயகனாக வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
