‘வாழை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த திரைப்படம் ‘மஞ்சணத்தி’. தனது நவ்வி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை அவர் தயாரித்து இயக்குகிறார். கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மாரி செல்வராஜின் முந்தைய படமான ‘வாழை’யுடன் ‘மஞ்சணத்தி’ படத்திற்கு தொடர்பு இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, ‘வாழை’ படத்தில் இடம்பெற்ற சிவநந்தன் கதாபாத்திரத்தின் பதின்பருவம் மற்றும் இளமைக்கால வாழ்க்கையை மையமாக வைத்து புதிய படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. தேனியில் நடைபெற்ற தொடக்க நிகழ்வில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்துகொண்டு கிளாப் போர்டு அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார். முக்கியமாக, ‘மஞ்சணத்தி’ மூலம் இளையராஜா மற்றும் மாரி செல்வராஜ் முதன்முறையாக ஒரு திரைப்படத்திற்காக இணைந்துள்ளனர். இதனால் படத்தின் கதைக்களம் மட்டுமின்றி, இந்த புதிய கூட்டணியின் இசையும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
—
