இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், வடிவுக்கரசி, யோகி பாபு உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ், மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் கே.எல் அவுட் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றன. ஏற்கனவே இப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது டப்பிங் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ‘கான் சிட்டி’ திரைப்படம் அடுத்த மாதம் ஜூன் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
—
