தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து பிஸியாக இருக்கும் நடிகைகளில் ராஷி கண்ணாவும் ஒருவர். தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு, ரஜினிகாந்துடன் ஆன்மிகம் குறித்து நடந்த உரையாடலை அவர் பகிர்ந்திருந்தார். அப்போது, ‘Living with the Himalayan Masters’ என்ற புத்தகத்தை ரஜினிகாந்த் பரிசளித்ததாகவும் கூறியிருந்தார். அந்த பதிவு, ராஷி கண்ணாவை சிந்தனை மிக்க நடிகையாக ரசிகர்கள் பார்க்க வைத்தது.
ஆனால் அதற்கு சில நாட்களிலேயே அவர் தனது இன்ஸ்டாகிராமில் புதிய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த மாற்றம் ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆன்மிகம் மற்றும் சிந்தனை சார்ந்த பதிவுக்குப் பிறகு, இவ்வளவு ஸ்டைலான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்திருப்பது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
