கவனத்தை ஈர்க்கும் ‘டிமான்ட்டி காலனி 3’ படத்தின் ‘ரத்தத்த தா’ பாடல்!

தமிழில் ‘டிமான்ட்டி காலனி’. 2015-ல் அருள்நிதி நடிப்பில் வெளியானது. இந்தப் படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். சஸ்பென்ஸ் மற்றும் பயமூட்டும் காட்சிகளால் ரசிகர்களை கவர்ந்த அந்தப் படம் பின்னர் கல்ட் ஹிட் எனப் பேசப்பட்டது. சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான ‘டிமான்ட்டி காலனி 2’ படத்திலும் அருள்நிதியுடன் பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அந்தத் தொடர்ச்சிப் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது மூன்றாம் பாகமான ‘டிமான்ட்டி காலனி 3’ ரிலீசுக்குத் தயாராகியுள்ளது. படப்பிடிப்பு முடிந்த நிலையில், வெளியீட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தின் சாட்டிலைட் மற்றும் OTT உரிமையை ZEE5 நிறுவனம் ரூ.50 கோடிக்கு கைப்பற்றியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உண்மையானால், அதிக தொகைக்கு விற்கப்பட்ட தமிழ் ஹாரர் படங்களில் ஒன்றாகும்.

மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் இந்தப் படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளது. அதிரடி மற்றும் வன்முறை அம்சங்கள் அதிகமாக இருப்பதால், பெரியவர்களுக்கான ஹாரர் அனுபவமாக படம் அமையும் என கூறப்படுகிறது.மேலும், படத்தின் முதல் பாடலான ‘ரத்தத்த தா’ தற்போது வெளியாகியுள்ளது. சாம் சிஎஸ் இசையமைத்து பாடியுள்ள இந்தப் பாடலை மோகன் ராஜன் எழுதியுள்ளார். ‘டிமான்ட்டி காலனி 3’ செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading