இயக்குனர் ராம்-ன் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் ஏஐ தொழில்நுட்பமா? வெளியான புது அப்டேட்!

இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருந்தாலும், இன்னும் திரையரங்குகளில் வெளியாகாமல் இருந்து வருகிறது. இதற்கிடையில், உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்த படம் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்று வருகிறது.

தற்போது, இந்த திரைப்படத்தை இவ்வருடத்திற்குள் திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே படத்தில் சில முக்கியமான கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. அந்த காட்சிகள் கதையின் காட்சியமைப்பில் முக்கிய பங்காற்றும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலின்படி, இயக்குநர் ராம் மற்றும் படக்குழு, முன்பாக உருவாக்கப்பட்ட சில கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மாற்றாக ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் புதிதாக உருவாக்கப்பட்ட காட்சிகளை இணைத்துள்ளதாக கூறப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியாக மேலும் வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading