ஜூலை 17ல் வெளியாகிறது மாதவனின் ஜி.டி.என் திரைப்படம்!

இந்திய திரையுலகில் பிரபல நடிகரான மாதவன், தற்போது இந்தியாவின் எடிசன் என அழைக்கப்படும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ‘ஜி.டி.என்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவர் ஜி.டி. நாயுடுவின் உருவத்தை பிரதிபலிக்கும் வகையில் முற்றிலும் மாற்றமான வயதான தோற்றத்தில் நடித்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படத்தின் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் ஜெயராம், சத்யராஜ், பிரியாமணி, யோகி பாபு மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை வர்கீஸ் மூலன், விஜய் மூலன், சரிதா மாதவன் மற்றும் மாதவன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்த படம் ஜூலை 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading