அஜித்தின் ரேஸிங் ஆவணப்படமான ‘Gladiators’-ன் புதிய போஸ்டர்கள் வெளியீடு!

நடிகர் அஜித் குமாரின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஆவணப்படம் ‘Gladiators – In Pursuit of Challenges’. 90 நிமிடங்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் புதிய போஸ்டர்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். இசையை ஜி.வி. பிரகாஷ் அமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

துபாய், அபுதாபி மற்றும் ஐரோப்பிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சுற்றுகளில் அஜித் பங்கேற்ற தருணங்கள் இதில் நேரடி பதிவுகளாக இடம்பெற்றுள்ளன. குறிப்பாக Asian Le Mans மற்றும் 24H Series போட்டிகளில் அவர் எதிர்கொண்ட சவால்கள், பின்னடைவுகள் மற்றும் வெற்றிகள் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

2025 துபாய் 24H ரேஸில் அவர் பெற்ற போடியம் சாதனை வரை இந்த ஆவணப்படம் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவின் முன்னணி பந்தய வீரர்களான நரேன் கார்த்திகேயன், ஆதித்யா படேல், ஜூலியன் கெர்பி ஆகியோரும் இதில் இடம்பெற்றுள்ளனர். ஆவணப்படமாக இருந்தாலும், உலகம் முழுவதும் திரையரங்குகளில் பெரிய அளவில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய போஸ்டர்கள் வெளியானதைத் தொடர்ந்து, அஜித்தின் ரேஸிங் வாழ்க்கையை திரையில் காண ரசிகர்கள் மேலும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading