‘டிராகன்’ படத்தின் கதை இதுதானா?

‘உக்ரம்’, ‘KGF: Chapter 1’, ‘KGF: Chapter 2’, ‘Salaar: Part 1 – Ceasefire’ போன்ற பிரம்மாண்ட வெற்றிப் படங்களை இயக்கி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்துள்ளவர் பிரஷாந்த் நீல். தற்போது அவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைந்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்று ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இந்த பிரம்மாண்ட ஆக்‌ஷன் திரைப்படத்திற்கு ‘டிராகன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனுடன், படத்தின் உலகத்தை அறிமுகப்படுத்தும் நான்கரை நிமிட க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

1967ஆம் ஆண்டில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் பின்னணியை மையமாகக் கொண்டு இந்த கதை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஆப்கான் டிரேடிங் கம்பெனி மற்றும் கோல்டன் டிரேடிங் கம்பெனி ஆகிய இரண்டு குழுக்களுக்கிடையே நடந்த போதைப்பொருள் வர்த்தகப் போராட்டத்தை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ருக்மினி வசந்த், அனில் கபூர், பிஜு மேனன், குஷ்பு சுந்தர், குரு சோமசுந்தரம், ராஜீவ் கனகலா மற்றும் அசுதோஷ் ராணா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படம், 2027ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading