விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா நடிக்கும் ‘எல்லோ எல்லோ டிரிட்டீ பெல்லோ’ பட டீஸர் வெளியீடு!

‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா, தற்போது ‘எல்லோ எல்லோ டிரிட்டீ பெல்லோ’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார். புதுமையான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படம் குறித்து ரசிகர்களிடையே ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த படத்தை விக்கி பாஸ்கர் எழுதி இயக்கியுள்ளார். மேலும், விஷ்ணு விஷால் மற்றும் சஞ்சய் அர்ஜுன்தாஸ் வத்வா இணைந்து தயாரித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் அதிகரித்து வரும் இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சர்களின் வாழ்க்கை முறை மற்றும் அவர்களை மையமாகக் கொண்ட சுவாரஸ்யமான கதையம்சத்துடன் இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

லவ் பேண்டஸி கலந்த பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள ‘எல்லோ எல்லோ டிரிட்டீ பெல்லோ’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையில், தற்போது இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading