ஆறு இந்திய மொழிகளில் உருவாகும் சிலந்தி-2!

கடந்த 2008ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘சிலந்தி’. இந்த படத்தில் முன்னா மற்றும் மோனிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். திகில் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் உருவான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கவனம் பெற்றதுடன், பிற மொழிகளிலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. தெலுங்கில் இந்த படம் ‘எர்ர குலாபி’ என்ற பெயரிலும், இந்தியில் ‘ஜால் – தி நெட்’ என்ற பெயரிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இந்த திரைப்படம் கன்னடத்திலும் ‘ரணதந்திரா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அந்த படத்தில் விஜய் ராகவேந்திரா மற்றும் ஹரிப்பிரியா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். புதிதாக திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவதற்காக ஒரு தனிமையான ரிசார்ட்டிற்கு செல்லும் போது, அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் மர்மமான மற்றும் விநோதமான சம்பவங்களே இந்த திரைப்படத்தின் மையக் கதையாக அமைந்திருந்தது.

தற்போது, ‘சிலந்தி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை தயாரித்த ஜி கம்பெனி நிறுவனத்தின் சார்பில் சங்கர் பழனிச்சாமி இந்த படத்தை தயாரிக்கிறார். மேலும், இப்படத்தை ஆதிராஜன் எழுதி இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட மொத்தம் ஆறு மொழிகளில் இந்த திரைப்படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் நடிகை மாளவிகா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை கம்போடியா மற்றும் சீனாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading