ஆகஸ்ட் மாதத்தை டார்கெட் செய்யும் ‘மண்டாடி’ படக்குழு!

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ் மற்றும் மிதுன் ஜெய்சங்கர் ஆகியோர் இணைந்து நடித்துவரும் திரைப்படம் ‘மண்டாடி’. ஆர்.எஸ். எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார். கதைக்களம் மற்றும் காட்சியமைப்பில் வித்தியாசத்தை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில், இந்த திரைப்படத்தை முழுக்க முழுக்க கடல் பின்னணியில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் கடல் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக சிறப்பு அரங்குகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ‘மண்டாடி’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காட்சித் தொகுப்பு, பின்னணி இசை, கிராபிக்ஸ் மற்றும் ஒலிப்பதிவு உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் முழு கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ‘மண்டாடி’ திரைப்படத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த படத்தை உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தயாரிப்பாளரே நேரடியாக விநியோகம் செய்து வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் திரைப்படத்தை சர்வதேச அளவில் ரசிகர்களிடம் கொண்டு செல்ல தயாரிப்புக் குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading