தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘அங்கீகாரம்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குனரான ஜே.பி. தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கீகாரம்’. இயக்குனர் பா. ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவம் கொண்ட ஜே.பி. தென்பாதியான், தடகள விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் சவால்கள், போராட்டங்கள் மற்றும் இன்னல்களை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளார். உண்மை சம்பவங்களின் பின்னணியில் இந்த படம் உருவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தின் மூலம் ‘அறம்’, ‘அயலான்’ போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். அவருடன் சிந்தூரி விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், அஜித் கோஷி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் குறித்து ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் டிரெய்லரும் வெளியாகியுள்ளது. விளையாட்டு வீரர்களின் உணர்வுகள், வாழ்க்கைப் போராட்டங்கள் மற்றும் சாதனைக்கான முயற்சிகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், ‘அங்கீகாரம்’ திரைப்படம் வருகிற ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading