கேரள மாநிலத்தின் பாலக்காட்டில் நடைபெற்ற ‘உத்சவ் 2026’ விழாவில் நடிகர் ரவி மோகன் சிறப்பு கவுரவத்துடன் கௌரவிக்கப்பட்டுள்ளார். இந்த விழாவில் அவருக்கு ‘தேவி ரத்னா’ விருது வழங்கப்பட்டது.
பாலக்காட்டில் உள்ள பல்லாசனா பழையகாவு ஸ்ரீ மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரவி மோகனும், கெனிஷாவும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தமிழ் சினிமாவிற்கு ரவி மோகன் வழங்கிய பங்களிப்பு, ரசிகர்களிடையே அவர் பெற்றிருக்கும் வரவேற்பு மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பு ஆகியவற்றை பாராட்டும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருதுடன் ரூ.1,00,001 பணப் பரிசு, தங்கச் சின்னம், பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பலகையும் வழங்கப்பட்டன.
விருதைப் பெற்றுக்கொண்ட ரவி மோகன், விழா ஏற்பாட்டாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார். அதன் பின்னர் கெனிஷாவுடன் இணைந்து “கண்மணி அன்போடு காதலன்” பாடலை மேடையில் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மேலும், மேடைக்கு செல்லும் முன்பு கெனிஷா, ரவி மோகனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
