ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்த இந்த படம், தணிக்கை தொடர்பான பிரச்சினைகள் காரணமாக வெளியாகாமல் போனது. இதன் காரணமாக, படத்தின் ஓடிடி உரிமை ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, படம் இணையதளங்களில் லீக் ஆன சம்பவமும் படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலைக்கிடையே, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார். இதனால் ‘ஜனநாயகன்’ திரைப்படக் குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களிடையே விஜய்க்கு கிடைத்துள்ள பெரிய ஆதரவு காரணமாக, படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை விற்பனை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என கூறப்படுகிறது.
மேலும், ஆரம்பத்தில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியிருந்த அமேசான் நிறுவனம் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக தகவல்கள் வெளியானது. தற்போது, பல முன்னணி ஓடிடி நிறுவனங்கள் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றுவதற்காக கடும் போட்டியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் ‘ஜனநாயகன்’ படக்குழுவினர் புதிய நம்பிக்கையுடன் உற்சாகமாக செயல்பட்டு வருகின்றனர்.
