இயக்குனர் பாலா பகவத் கீதையை மேற்கோள் காட்டி தமிழக முதல்வர் விஜய்க்கு வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
உன் எதிரில் நிற்பவர்கள் சகோதரர்களே என்றாலும் போரிட்டு வென்று விடு!
– பகவத் கீதை –
வெற்றிக்குப் பிறகும் வென்றெடுத்தவர்களையும் சகோதரர்களாகவே பார்த்து விடு!
– அரசியல் கீதை –
வாழ்த்து மடல்
வெற்றியும் நிரந்தரமில்லை …
தோல்வியும் நிரந்தரமில்லை …
நிரந்தரம் என்பது மனித மாண்பில் மட்டும் தான் இருக்கிறது என்று அனைத்து சகோதரர்களையும் நேரில் சந்தித்து தமிழ்நாடே நெகிழும்படி நிகழ்த்திக் காட்டிவிட்டீர்கள், மாண்புமிகு முதல்வர் அவர்களே!
பாரதமே வியக்கும்படி நல்லாட்சி புரிய வாழ்த்துகள்!!!. இவ்வாறு அவரது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
