‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் டைட்டில் கார்டுகளை மாற்றும் வேலைகள் ஆரம்பம்?

தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுள்ள நடிகர் விஜய் நடித்த கடைசி திரைப்படம் ‘ஜனநாயகன்’. இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கை தொடர்பான பிரச்சினைகள் காரணமாக படம் அப்போது வெளியாகாமல் தாமதமானது. இதுகுறித்து சமீபத்தில் பேசிய தயாரிப்பாளர் கேவிஎன் வெங்கட், இன்னும் இரண்டு வாரங்களுக்குள் படம் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, இந்த திரைப்படம் மே மாத இறுதி அல்லது ஜூன் மாத முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் டைட்டில் கார்டை புதிய வடிவமைப்பில் மாற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு, படத்தின் நாயகனான விஜய்யின் பெயருக்கு முன்னால் “தமிழக முதல்வர்” என்ற அடையாளத்தையும் டைட்டில் கார்டில் சேர்க்க உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் ரசிகர்களின் நீண்டநாள் விருப்பத்தை கருத்தில் கொண்டு இந்த மாற்றங்கள் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், புதிய டிசைனில் உருவாக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading