“முதல்வர் விஜய்” என்ற டைட்டில் கார்ட் உடன் வெளியாகுமா ஜனநாயகன்? வெளியான புது அப்டேட்!

தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படம் ‘ஜனநாயகன்’. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே இந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அரசியல் மற்றும் சினிமா என இரண்டிலும் விஜய் மீது ரசிகர்களின் கவனம் அதிகமாக இருந்த காரணத்தால், இந்த திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆனால், திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாக, திட்டமிட்டபடி திரைப்படத்தை வெளியிட முடியவில்லை. இதனால் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது தமிழக சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து, விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மீண்டும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், விஜய் தற்போது தமிழக முதலமைச்சராக இருப்பதால், திரைப்படத்தின் டைட்டில் கார்டில் “முதல்வர் விஜய்” என்று மாற்ற வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து பேசிய கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனத்தின் உரிமையாளர் வெங்கட் நாராயணா, “சட்ட விதிமுறைகள் அனுமதித்தால், திரைப்படத்தின் டைட்டில் கார்டில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது விஜய் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading