அனில் ரவிபுடியின் புதிய படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்?

தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து கமர்ஷியல் வெற்றி திரைப்படங்களை வழங்கி முன்னணி இயக்குநராக உயர்ந்திருப்பவர் அனில் ரவிபுடி. இவரது இயக்கத்தில் வெளியான ‘F2’, ‘F3’, ‘பகவந்த் கேசரி’, ‘சங்கராந்திகி வஸ்துனம்’, ‘மன சங்கரா வர பிரசாத் காரு’ உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றன. குடும்ப பொழுதுபோக்கு மற்றும் நகைச்சுவை கலந்த படங்களை இயக்குவதில் தனித்துவம் கொண்ட அனில் ரவிபுடி தற்போது மீண்டும் நடிகர் வெங்கடேஷுடன் கூட்டணி அமைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் 2027ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் வெங்கடேஷுடன் இணைந்து தெலுங்கு சினிமாவின் இளம் நடிகரான நந்தமுரி கல்யாண் ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும், நந்தமுரி கல்யாண் ராமுக்கு ஜோடியாக இளம் நடிகை கிர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டணி ரசிகர்களிடையே தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் இணைந்துள்ளதாக தெலுங்கு திரையுலக வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் ஏற்கனவே இந்த திரைப்படத்திற்காக மூன்று பாடல்களை இசையமைத்து வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இயக்குநர் அனில் ரவிபுடி மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இருவரும் முதல்முறையாக இந்த திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளதால், இசை மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading