தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘அங்கீகாரம்’ படத்தின் ட்ரெய்லர் அப்டேட்!

ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜே.பி. தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கீகாரம்’. இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்ட ஜே.பி. தென்பாதியான், இந்த திரைப்படத்தை உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கியுள்ளார். குறிப்பாக தடகள விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைச் சவால்கள், அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் மற்றும் போராட்டங்களை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் ‘அறம்’, ‘அயலான்’ உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். மேலும், நடிகை சிந்தூரி விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான் மற்றும் அஜித் கோஷி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமூக கருத்துக்களுடன் உருவாகும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல கவனத்தை பெற்றிருந்தது. இந்த நிலையில், தற்போது திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை காலை 11.03 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading