மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘முகமூடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே, தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து பான் இந்திய நடிகையாக உயர்ந்துள்ளார். கடைசியாக அவர் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து, ‘கூலி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மோனிகா’ பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடியிருந்தார். மேலும், விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தற்போது ‘ஹாய் ஜவானி டோ இஷ்க் ஹோனா ஹாய்’ என்ற இந்தி திரைப்படத்திலும் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை பாலிவுட் நடிகர் வருண் தவானின் தந்தையும் பிரபல இயக்குநருமான டேவிட் தவான் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தொடர்பான தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த இந்தி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘டேரே ஹோ ஜான்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அந்த பாடலில் இடம்பெற்ற தோற்றத்தில் எடுத்த புகைப்படங்களையே தற்போது அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவுக்கு பாடகி ஜோனிடா காந்தி “ஹாட்டி” என்று கருத்து பதிவிட்டுள்ளார். மேலும், இந்த திரைப்படம் வருகிற ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
