‘கிரேசியாஸ் எல் கிளாசிகோ’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை உலகப் புகழ்பெற்ற ‘கேம்ப் நவ்’ கால்பந்து மைதானத்தில் வெளியிட்ட டோவினோ – நஸ்ரியா!

டொவினோ தாமஸ் நடித்த ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது அவர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு ‘கிரேசியாஸ் எல் கிளாசிகோ’ என்று வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் ஸ்பெயினில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ‘கேம்ப் நவ்’ கால்பந்து மைதானத்தில் வெளியிடப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த திரைப்படத்தின் கதை, கேரளாவின் மலபார் பகுதியின் கால்பந்து கலாச்சாரத்தையும், உலகப் புகழ்பெற்ற ஸ்பானிஷ் கால்பந்து ரசிகர் ஒருவரின் மனநிலையையும் இணைக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மலையாள சினிமா வரலாற்றில் ஒரு சர்வதேச கால்பந்து மைதானத்தில் திரைப்படத்தின் டைட்டில் வெளியிடப்படுவது இதுவே முதல்முறை என்பதால், இந்த அறிவிப்பு திரைப்பட ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மேலும், ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை நஸ்ரியா இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தை முஷின் பெராரி இயக்குகிறார். இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான ‘கே.எல் 10’ திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதிய திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading