ரஜினி – கமல் நடிக்கும் படத்தில் இணைகிறாரா நடிகை த்ரிஷா? உலாவும் புது தகவல்!

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இன்பன் உதயநிதி தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 47 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்க இருப்பதால், இந்த திரைப்படம் குறித்து திரையுலகில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு உருவாகும் இந்த முக்கிய கூட்டணியில், பிரபல ஒளிப்பதிவாளரான ராஜீவ் மேனனும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. ‘KH x RK’ என ரசிகர்கள் அழைத்து வரும் இந்த திரைப்படம் குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. குறிப்பாக, “யார் ஹீரோ?” என்று ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இயக்குநர் நெல்சனிடம் கேட்கும் வசனம் ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாக மாறியது. இந்த நிலையில், தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷா இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading